சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநரும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்தில் சூர்யா முதன்மையான வேடத்தில் நடிக்க அவருடன் திரிஷா , நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் , சுவாசிகா‌, ஷிவதா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். அதிரடிஎஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு- எஸ் ஆர் பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பட வெளியீடு தொடர்பான திரையுலக வணிகர்கள் – டிஜிட்டல் நிறுவனங்கள்- தயாரிப்பாளர்கள் ஆகியோருடைய ஒருமித்த கருத்து எட்டப்படாததால் படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டே வந்தது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே எதிர்வரும் மே மாதம் ‘கருப்பு’, ஜூலை மாதம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் ஆண்டின் இறுதியில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் # சூர்யா 47 என இந்த ஆண்டில் ரசிகர்களுக்கு மூன்று படைப்புகளை வழங்கி சூர்யா உற்சாகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

th

திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகல்

March 22, 2026

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த

sta

தமிழகத்தில் 897.82 கோடி விடியல் பயணங்கள் – முதல்வர் ஸ்டாலின்

March 22, 2026

விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம்

Onta

பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஒன்டாரியோ மாகாணத்தின் முதல் திருநங்கை!

March 22, 2026

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த ஒரு மொடல், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில்

Canada

ஈரான் புரட்சி; கனடாவில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமகால நிகழ்வை நினைவுபடுத்திய செய்திகள்

March 22, 2026

ஈரானில் ஏற்பட்ட கலக்கம், உலக எண்ணெய் சந்தைகளில் பெரிய பாதிப்பு, கனடாவிலும் அதன் அப்பாற்பட்ட பகுதிகளிலும் வானளாவிய பெட்ரோல் விலைகள்—2026

Inkaran

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது?

March 22, 2026

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன்

Nilan

இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலப்பரப்பை வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

March 22, 2026

தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை

sman

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

March 22, 2026

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும்

Ali

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது – அலி சப்ரி

March 22, 2026

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது

lan

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

March 22, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை

auto

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

March 22, 2026

பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர

NAMAL

மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

March 22, 2026

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக்

Surya

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

March 22, 2026

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம்