சுரேஷ் சலே விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அமைச்சரவைப் பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;

“முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற வகையில், சுரேஷ் சல்லே இந்த விசாரணைக்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். தகவல்களை மறைத்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தமக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்தி, பாதுகாப்புப் பிரிவினருக்கு உதவுவதே சுரேஷ் சல்லே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும்”

என அமைச்சர் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ;

அவருக்கு என விசேட சிறைச்சாலை அறையோ அல்லது தனிப்பட்ட வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையான நடைமுறைகளே அவருக்கும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், அவருக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உறவினர்கள் அவரைப் பார்வையிடவும், உணவு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, தேவைப்படும்போது தாமதமின்றி மருத்துவச் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாகக் கூறினார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கடந்த கால வழக்கமான நடைமுறைகளைப் போன்றே நிலையான தடுப்புக்காவல் ஏற்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்பதை விவரித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவரது உடல்நிலை மற்றும் நலன்புரிச் செயற்பாடுகளை சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்

Toronto-Election-1536x783

டொரன்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், வெறும் வாக்குறுதிகளைத் தாண்டி மேலதிகமானவற்றை எதிர்பார்க்கும் ஸ்கார்பரோ (Scarborough

October 12, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஸ்கார்பரோ பகுதி ஒரு முக்கிய போர்க்களமாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில்,

toronto mayor election

அக்டோபர் 26-ஐ முன்னிட்டு முக்கிய பிரச்சினைகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் உள்ளூர் அமைப்புகள்

October 12, 2026

வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. நீங்கள் வேட்பாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள பிரச்சினைகள் பற்றி மேலும்

8

“முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 12, 2026

சென்னை: முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கொள்கைக் கூட்டணி:

7

“அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி வீட்டில் ஆலோசனை; அதிமுகவில் மீண்டும் விரிசலா?”

October 12, 2026

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனையில்

vikatan_2020_02_59d19f1a_91b8_4e13_9cf5_9b6856d002d4_p8g

“நோபல் பரிசு ‘நவி பிள்ளை’க்கு அரசு சார்பில் பாராட்டு விழா!” – த.வெ.க அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்!

October 12, 2026

சென்னை: அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த