சுரேஷ் சலே தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய வீரர் என முன்னிறுத்தி ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமா? – சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி, ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே விவகாரம் தொடர்பாக யாழில் சனிக்கிழமை (20) ஊடகங்களை சந்தித்து பேசியபோதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலே மீது சித்திரவதைகள் புரியப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எவ்வகையான சித்திரவதைகள் என தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கணினி, தொலைபேசி என்பவற்றின் கடவுச்சொற்களை கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் சிறு அறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் சித்திரவதை என கூறுவார்களாயின், அதனை விட பெரும் சித்திரவதைகளை எங்களுடைய தமிழ் இளைஞர்கள் அனுபவித்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்கள் தங்களின் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் உயிர் மாய்த்தார்களா? அல்லது தங்களின் பின்னால் இருந்தவர்களை காப்பாற்ற உயிர்மாய்த்தார்களா என தெரியவில்லை.

அதேபோன்றே தற்போது சுரேஷ் சலே என்பவரின் உயிருக்கு ஆபத்து என கூறுகிறார்கள். சிலரை காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க நினைக்கிறாரா? அல்லது தனது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கிறாரா?

ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவிற்கும் உள்ள தொடர் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதனை விசாரணை செய்யும்போது, புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம்.

என்ன காரணத்திற்காக ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது? அதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல்வாதிகள் பின்புலமாக நின்று இயக்கினார்களா? என்பதை முற்றுமுழுதாக கண்டறியப்படவேண்டும். அரசாங்கத்தின் விசாரணைகள் காத்திரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவித்தார்.

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட

Mahinda-Rajapaksa

மோசமான நிலையில் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை! அனைவரையும் பிரார்த்திக்குமாறு அழைப்பு

October 13, 2026

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் – சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த

October 13, 2026

குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் காவியுடையை அணிந்திருக்கவேண்டுமா என்ற தீர்மானத்தை அவர்களின் பௌத்தமத பீடங்களே தீர்மானிக்கவேண்டும் என சிறைச்சாலை

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?

October 13, 2026

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு ஆஞ்சியோகிராம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

Shiranthi-Rajapaksa 1

சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

October 13, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்திராஜபக்சவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை இடம்பெறுவதாகஅவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளதை உடனடியாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு கொழும்பு