உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இடைமனு (Intervening petition) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது இந்த இடைமனுவின் மூலம், சுரேஷ் சல்லேவின் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பதற்கு அனுமதி கோரியுள்ள கர்தினால் ஆண்டகை, அந்த மனுவை நிராகரிக்குமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.