வடக்கு – கிழக்கு யுத்தம் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே உருவானது!

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நமது நாட்டின் அரசியல் உலகை உற்றுநோக்கினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எந்தவொரு தவறான செயலையும் செய்யத் துணியும் நிலையையே காண முடிகின்றது. நாம் செய்யும் செயல் சரியானதா தவறானதா, சட்டப்பூர்வமானதா அல்லது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எவருமே சிந்திப்பதில்லை. தற்போதைய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை இந்த அரசியல் குறுக்கு வழிகளாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒரு தேர்தலை நடத்தி புதியதொரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதற்கு அடுத்த நாள் முதலே இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாம் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்ற குறுகிய அரசியல் வியாபாரமே இங்கு ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள், எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக்கட்டியெழுப்புவோம் என்று எவரும் சிந்திப்பதில்லை. எப்போதும் மற்றவர்களின் கால்களை இழுத்து வீழ்த்தவே பார்க்கின்றனர். இதுவே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற எவ்வித இன, மதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் நாட்டைச் சரியான பாதையில் முன்னோக்கிக் கொண்டு சென்றன.

எனினும், 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய மற்றும் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினால் இந்த நாடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. வடகிழக்கில் ஏற்பட்ட யுத்தமும் இத்தகையதொரு தேவையற்ற அரசியல் சுயநலத்தால் உருவானதே ஆகும்.

எமது நாட்டின் 75 அரசியல் ஆண்டுகாலப் பேரழிவுக்குப் பின்னால் இருப்பது இந்த அரசியல் குறுக்கு வழிகளேயாகும். அத்தகைய குறுக்கு வழிகளைத் தேடி நமது நாட்டுத் தலைவர்கள் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிந்தனர். இத்தகைய குறுக்கு வழிகள் மூலம் இலங்கையை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அர்ப்பணிப்பு அவசியமாகும்.

நீதியும் நேர்மையும் என்பது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல சுலபமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தவறான செயல்களைச் செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மனச்சாட்சிக்கு இணங்க வேலை செய்யப் பழக வேண்டும். எனவே, வாழ்க்கையிலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதிலோ குறுக்கு வழிகள் என்று எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை