சி.டி விக்ரமரத்ன மரணத்தில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் ; தேசிய பாதுகாப்புத் பிரச்சினை உள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புத் பிரச்சினை எழுந்துள்ளமை தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார்

கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள், நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றினார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு அப்பாற்பட்ட, மிகவும் நேர்மையான மற்றும் திறமையான ஒரு அதிகாரியாகவே அவரை நான் பார்த்தேன்.

அவர் யாருக்கும் சார்பாகச் செயல்படவில்லை என்பதுடன், அரசியல்வாதிகளுக்குத் தேவையான முறையில் தீர்மானங்களை எடுத்த ஒரு அதிகாரியும் அல்ல. அவரைப் போன்ற மிகவும் திறமையான மற்றும் நேர்மையான ஒரு அதிகாரிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது எமக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.

இன்று இந்நாட்டின் சில முக்கிய வழக்குகளில், தீர்மானமிக்க சாட்சியாக இருந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். நமது நாட்டின் பொலிஸ் வரலாற்றில் ஒரு முன்னாள் பொலிஸ்மா அதிபரோ அல்லது இராணுவ அதிகாரிகளோ தற்கொலை செய்துகொண்ட வரலாறு இல்லை. ஆனால், இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும்.

எனவே, அரசாங்கம் இந்த விசாரணை குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு முன்னரும் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் எனச் சிலர் இந்த முறையில் தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் சிலர் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இது அரசாங்கத்தின் தவறான ஆட்சி முறையின் காரணமா என்று தெரியவில்லை. ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் இந்நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.

இந்நாட்டில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரச்சினை உள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஒரு கூற்றை விடுத்து, எனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறான பொலிஸ் பாதுகாப்பை நான் கோரவும் இல்லை, எனக்கு வழங்கப்படவும் இல்லை. இவ்வாறான பொய்க் கூற்றுக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

அமைச்சர் எதையோ ஒரு தாளில் எழுதிவந்து வாசிக்கின்றார். அது ஒரு அறிக்கையா அல்லது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. ஆனால், இன்று பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்பது பாதுகாப்புத் தொடர்பில் எழுந்துள்ள பாரதூரமான பிரச்சினையாகும் என்றார்.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட