சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார், சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 ஆம் திகதி இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும், 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சி இன் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான, பொலிஸ் சாஜன் சிவ ராஜா(53207), பொலிஸ் கொஸ்தபல் களான சஞ்ஜீவ ராஜ் (37747), கருணாரத்ன (105221), பெண் பொலிஸ் கொஸ்தபில்களான ரஜித்தா (10137), ஓவியா (12439) ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு