சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(10)முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர் தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும் மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர்.

ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்கள்,அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகளும், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் நடைபெறும் அபகரிப்புகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர்.

எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு போராட்டம் ஊடகவும், ஊடக சந்திப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் நடாத்தியது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆனால் நாங்கள் 17 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இதுவரைக்கும் எமக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. தற்பாதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் அனைவராலும் போற்றப்பட்டாலும் எமது பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இயலாத அரசாங்கமாகவே இருக்கின்றது.

இவர்களும் ஒரு இனவாத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசும் கடந்த காலங்களில் எக்காரணத்திற்காகவும் நாங்கள் இலங்கை இராணுவத்தை விசாரணைக்குட்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10), வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகளுக்கு தங்கள் நிலை குறித்து கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அன்றி நீதியோ இல்லாமல் தொடர்கிறது.எங்கள் அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்று தெரியாமல், வாழ்க்கை தாங்க முடியாத அளவு துயரமாக உள்ளது.

இந்த “சர்வதேச மனித உரிமைகள் தினம்” 1948 டிசம்பர் 10 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு முதல், (இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது தொடக்கம்) இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு ,ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இனப்படுகொலையின் மிகவும் கொடூரமான இனப்படுகொலையொன்று முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் மேற்கொள்ளப்பட்டது.

சரணடைந்தவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று பொய்யான வாக்குறுதி அளித்து அதை நம்பி தாமாகவே சரண்டைந்த, 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும் உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும்,இலங்கை அரசாங்கத்தால், வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல், எங்கள் வலி மற்றும் போராட்டம் நின்றபாடில்லை.

16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது.

அதிகாரத்திற்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டு வழிமுறைகள் மூலம் நீதியை வழங்கும் என்று கூறி சர்வதேச சமூகத்திற்கு முன் தன்னை ஒரு மீட்பராக முன்வைக்கிறது.

ஆயினும், ஒவ்வொரு முறையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோப்பை (files)ஐ மூடுவதற்கும் முன்னேற்றம் என்ற மாயையை உருவாக்குவதற்கும் செயல்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்கு வழிகளை அறிமுகப்படுத்துகின்றனர். சர்வதேச ஆதரவுடன், நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எமக்கான நீதியை வழங்கத் தயாராகவோ அல்லது எதிர்ப்புகளை மீறி செய்யக் கூடிய திற னுடையவராகவோ இருக்க மாட்டார். எனவே, எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை மூலமே வர வேண்டும்,

அதுவும் காலதாமதமின்றி வர வேண்டும். எனவே, நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம்:

இனப்படுகொலை ,சர்வதேச குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்றுள்ளது.

WhatsApp Image 2026-08-09 at 21.45.02

டொராண்டோ மேயர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு!

August 9, 2026

டொராண்டோ மேயர் வேட்பாளரும் தொழில்முறை பொறியாளருமான டாக்டர் பஹிரா அப்துல்சலாம் (Dr. Bahira Abdulsalam), இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உள்நாட்டு

chau

ரொறன்ரோ மேயர் தேர்தல் புதிய கருத்துக்கணிப்பு: முன்னிலையில் ஒலிவியா சௌ!

August 9, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு இன்னும் 80 நாட்கள் உள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று ரொறன்ரோ மேயர் பந்தயத்தின் தற்போதைய நிலவரத்தை

WhatsApp Image 2026-08-09 at 19.59.18

செம்மணியில் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாமல் சிறுவனின் எலும்புகூடு!

August 9, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதி இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருடைய

_103113703_0c9c0649-85a5-44b4-a84a-57154aed8515.jpg

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது! 5 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி! – முழு நிலவரம்!

August 9, 2026

கூடலூர் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால்

83e03253-6dbc-4f6f-ae69-03efb126b8ac

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை! சிமெண்ட், இரும்பு மற்றும் தொழிலாளர் கூலிப் பட்டியல் திருத்தம்! பொதுப்பணித்துறை அதிரடி!

August 9, 2026

சென்னை அரசு கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், திட்டச் செலவுகளைக் குறைக்கவும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப்

ministerramesh-2026-08-09-11-28-35

பழனி, மதுரை கோயில் நில மோசடிகளில் அதிரடி நடவடிக்கை! – அமைச்சர் ரமேஷ் பேட்டி!

August 9, 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நில மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கோயில்களில்

397df180-4db1-11ef-b2d2-cdb23d5d7c5b.jpg

கமிஷனுக்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட 800 பேர் கூண்டோடு கைது! தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

August 9, 2026

சென்னை ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் கமிஷனுக்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 800

kanimozhi-nvn-somu-2026-08-09-12-35-12

“பாஜகவுடன் கூட்டணியா? அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை!” – திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு அதிரடிப் பேட்டி!

August 9, 2026

சென்னை சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்

cm-vijay-keerthana

விருதுநகர் மேற்கு மாவட்டத்தைக் கழகத்தின் கோட்டையாக மாற்றுவோம்! தவெக புதிய பொறுப்பேற்ற அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சிப் பதிவு!

August 9, 2026

சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாக வசதிக்காகப் புதிதாக உருவாக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒன்றான ‘விருதுநகர் மேற்கு’ மாவட்டக்

69615

விவசாயிகளிடம் ரூ.1500 கோடி வசூலித்துவிட்டு மோசடியா? மின் இணைப்பு வழங்காத தவெக அரசை கண்டித்த அன்புமணி ராமதாஸ்!

August 9, 2026

சென்னை தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாக இணைப்பு வழங்காமல்

1200-675-27345049-thumbnail-16x9-markandeyan

“பணம் கொடுப்பதும், பதவி கொடுப்பதும் ஒன்றுதான்!” – தவெகவில் விஜயபாஸ்கருக்குப் பதவி வழங்கியதை விளாசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

August 9, 2026

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ

1200-675-24228773-thumbnail-16x9-sp-velumani

“உங்களின் தவறான முடிவால் பணத்தை இழந்த அதிமுகவினர்!” – எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பகிரங்கக் கடிதம்!

August 9, 2026

சென்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன் மற்றும்