ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில்இ உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா றிபெகினா சம்பியனானார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியில்இ முதல்நிலை வீராங்கனையான அர்ய்னா சபலெங்காவை எதிர்கொண்ட கஸக்ஸ்தானின் றிபெகினா 6-4இ 5-7இ 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃவ்வை வென்று இறுதிப் போட்டிக்கு றிபெகினா முன்னேறிய நிலையில்இ மற்றைய அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை வென்று இறுதிப் போட்டிக்கு பெலாரஸின் சபலெங்கா தகுதி பெற்றிருந்தார்.