இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
புல்மோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 300 லீற்றருக்கும் அதிகமான டீசலைச் சேகரித்து விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோமரங்கடவல பகுதியில் உள்ள கால்நடை பண்ணை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 டீசல் கொள்கலன்கள் மற்றும் சந்தேக நபர்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
உருபொக்க பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி பெற்றோலை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் வரை பொறுத்திருக்குமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய எரிபொருள் கையிருப்பு தற்போது இலங்கையில் (திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் வீடுகளில் உள்ள சேகரிப்புகள் உட்பட) காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.