முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (08) நிராகரித்துள்ளது.
அரசாங்க சம்பள விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கடந்த ஜூன் 18 ஆம் திகதி சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரே காலப்பகுதியில் இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களிடமிருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.