கொட்டகலையில் வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தளபாடங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார். ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், “நாங்கள் அனைவரும் ஒரே அளவில்தான் பாதிக்கப்பட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கேட்டால், கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஒருவரையொருவர் கைகாட்டுகின்றனர். நாங்கள் வங்கிக்கும் பிரதேச செயலகத்திற்கும் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

அரசாங்கத்தால் எங்களுக்கு நான்கு பிஸ்கட் பெக்கற்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. அதையும் 5 வயதுக்குக் குறைந்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் சாப்பிடக்கூடாது எனக் கூறினர். வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் போராடினோம். ஆனால், கிராம உத்தியோகத்தர் வெள்ளம் புகுந்ததற்கான புகைப்படம் இருக்கிறதா எனக் கேட்கிறார். இது மிகவும் அநீதியானது,” எனத் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், இது குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதன்போது, சிலருக்கான நிவாரணக் காசோலைகள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை உரிய தீர்வு கிடைக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து மக்கள் கலைந்து சென்றனர்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், “ரொப்கில் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களில் 20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது. விடுபட்டவர்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுக்க நான் நேரடி நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிடில் மக்களுடன் இணைந்து நானும் போராடுவேன்,” என்றார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது