உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (Easter Sunday terror attacks) குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக (Respondents) பெயரிடப்பட்டுள்ளதாக ‘ நிருபர் தெரிவித்துள்ளார்.