கூட்டுப் பாலியல் வன்கொடுமை; “நான் அமைதியாக செல்ல விரும்புகிறேன்” கருணைக்கொலையை விரும்பியேற்று உயிர்துறந்த இளம்பெண்!

தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது.

அதனையடுத்து, நோலியா காஸ்டிலோவின் கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமையை அந்த இளம்பெண்ணுக்கு வழங்கி அனுமதித்தது.

நோலியாவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்பேரில், நேற்று மாலை அப்பெண் கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

“நான் அமைதியாக விரும்புகிறேன். எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” என தனது தந்தையிடம் கூறிய நோலியாவின் வார்த்தைகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நோலியா கோரியபோது, அதை ஏற்க மறுத்த அவரது தந்தைக்கு ஆதரவாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முன்வந்தன.

“துன்பத்துக்கு மரணம் தீர்வாகாது” என்றும் “அரசு பராமரிக்கத் தவறியதாலேயே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டது” என்றும் தெரிவித்து வந்தன. அந்த அமைப்புகளின் ஆதரவுடன், மகளுக்கான கருணைக்கொலைக்கு எதிராக, தந்தை எழுப்பிய சட்ட ரீதியான மறுப்புரைகளால் கருணைக்கொலை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

தன் மகளுக்கு ஆளுமைக் குறைபாடு இருந்ததாகவும் அது அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதித்துள்ளதாகவும் தந்தை வாதிட்டார்.

“மக்களினது, குறிப்பாக, மிகுந்த பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்களை பாதுகாப்பது அரசின் கடமை. மனநலப் பிரச்சினைகள் உள்ள ஓர் இளம்பெண்ணின் விடயத்தில் இது பொருந்தும்” என்றும் அவர் எதிர்வாதத்தை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து, 18 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நோலியாவும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நோலியாவுக்கு கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்தது.

ஸ்பெயினில் கருணைக்கொலை சட்டம் 2021இல் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், முதல் முறையாக ஒரு நீதிபதி, தீர்ப்பளிப்பதற்காகவே ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றதென்றால், அது இந்த வழக்காகத்தான் இருக்கமுடியும் எனக் கூறப்படுகிறது.

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்

ss

மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

April 16, 2026

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான

death

வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா

tur

துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

April 16, 2026

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த