சரியான விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) டயானா கமகே இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, தமது கட்சிக்காரர் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக மன்றிற்குத் தெரிவித்தார்.