குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (22/07) காலை பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவிட்டு
நடத்துனரின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை இவரது உடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட மருத்துவ நடவடிக்கைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தனது கடமையை இறுதி மூச்சுவரை கைவிடாத ஒரு பொறுப்பான சாரதியின் வாழ்க்கை இது. அவரது கடமை உணர்வும், மனிதநேயமும் என்றும் நினைவுகூரப்படும் பலரும் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது