குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைகளம் மோசடி ?

பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் இன்று சனிக்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விஹாராதிபதியை சந்தித்து குருந்தூர் மலை பற்றிய முக்கிய விடயங்களை கலந்துரையாடினார். இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்,

சனிக்கிழமை (01) மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி விசேட அழைப்பின் பெயரில் சந்தித்தேன்.

அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்கு ஆகும். குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M A சுமந்திரன் இதற்கான வழக்கினை வாதாடி இருந்தார் .

விஹாராதிபதி எனக்கு எழுத்து மூலமான ஓர் கடிதத்தை வழங்கி இருந்தார். அதில் அவர் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு 21.07.2025 முறைப்பாட்டின் பிரதி ஆகும்.

அதில் அவர் பெயர் குறிப்பிட்டு தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அட்சத்தராக செயல்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையகப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார்.

பெளத்த துறவியான இவர் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ் ஆவணத்தை என்னிடம் தருவதற்காக என்னை அழைத்திருந்தார்.

அத்துடன் அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.

இந்த நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்பதனை தெரிவித்திருந்தார் என்றார்.

arrest

திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவனையும் காதலியையும் தாக்கிய மனைவி கைது

January 24, 2026

தென்னிலங்கையில் திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவன், மற்றும் காதலியை தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்கை பகுதியிலுள்ள வீடொன்றில்

ja

உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் யானைகளால் சேதம்

January 24, 2026

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் சனிக்கிழமை (24) அதிகாலை உட்கொகுந்த காட்டு யானைகள் வீடுகளை

pra

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் பிரஜாசக்தி வேலைத்திட்டம்; புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

January 24, 2026

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய

red

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலக குற்றவாளி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்!

January 24, 2026

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து

Eng

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

January 24, 2026

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து

Jothi

முத்துக்குமாரசுவாமி; தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

January 24, 2026

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

hora

பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்; பலரை கைது செய்ய உத்தரவு

January 24, 2026

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய

boat

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

January 24, 2026

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை

fr

ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைது

January 24, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு

US CA

காசா அமைதி வாரியத்திலிருந்து கனடா நீக்கம்: பிரதமர் மார்க் கார்னியுடன் டிரம்ப் மோதல் எதிரொலி

January 24, 2026

காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில்

in

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

January 24, 2026

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல பொலிவுட் பாடகி அனுராதா பாட்வாலின் இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை கோபுரத்தில்

Inde

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

January 24, 2026

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம்