கிழக்கு மாகாண அதிபர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக கிழக்கில் கவனயீர்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் கடமை நிறைவேற்று அதிபர்களாகப் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும், இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ‘கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க’ப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததைத் தொடர்ந்தே, அவர்கள் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய கோரிக்கைகள்:

நீண்டகாலமாகச் சேவையாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.

வயது எல்லையைக் கடந்த முன்னாள் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குதல்.

அதிபர் சேவைக்குரிய சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய நலன்களை வழங்குதல்.

திடீர் இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி, மனிதநேயமான தீர்வுகளை வழங்குதல்.

கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு இணைந்து நிலையான கொள்கையொன்றை உருவாக்குதல்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனை:

போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டு யுத்தம், 2004 சுனாமி, வெள்ளப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் எனப் பல்வேறு சவாலான சூழ்நிலைகளிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாடசாலைகளை வழிநடத்தியவர்கள் நாங்களே. ஆனால், இன்று எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல், திடீரென ஆசிரியர் பணிக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் எமது தொழில்முறை கௌரவத்தைச் சிதைக்கின்றன” எனத் தெரிவித்தனர்.

மேலும், ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தங்களுக்கு எதிராகப் பாரபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். நிர்வாக அனுபவம் கொண்ட தங்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வலயக் கல்வி அலுவலகங்களில் கல்வி அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக்கொள்ளுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

முழக்கங்கள்:

“எமது சேவைக்கு நீதி வேண்டும்; காலதாமதம் வேண்டாம்!”, “கடமை செய்தோம்; உரிமையையும் வழங்குங்கள்!”, “நிர்வாகம் இயங்க எம்மை மதியுங்கள்!”, “நீதி தாமதமானால் அது அநீதியே!”, “அரசியல் வேண்டாம்; நிர்வாக நீதி வேண்டும்!” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆளுநர் தங்களின் மகஜரைப் பொறுப்பேற்க மறுத்த நிலையில், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்