கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் புகுந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (15.02.2026) இடம்பெற்றுள்ளது.
வட்டக்கச்சி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பார்வையிட அனுமதிக்குமாறு அங்கு காவலுக்கு நின்ற காவலாளியிடம் கோரியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையின் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.