இன்று (16) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது.
இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாய்மொழித் தர்க்கமாக ஆரம்பமான இந்த மோதல், பின்னர் மிக வேகமாக தீவிரமடைந்ததாக இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் மூலம் தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வசம் இருந்த கோப்புகளை (Files) அமைச்சர் எடுக்க முயன்ற போது, இந்த மோதல் மேலும் தீவிரமடைந்ததை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
இந்தத் தர்க்கத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அமைச்சரை எச்சரிக்கும் தொனியில், “என்மேல் கை வைத்தால், நானும் கை வைப்பேன்… விளங்கிற்றா?” என்று கூறுவது அந்த வீடியோவில் கேட்கிறது