முல்லைத்தீவு – தேராவில் பகுதியில் வயதான பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(13.04.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.