கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு; அவுஸ்திரேலிய அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான திரு. ஜூலியன் ஹில் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க அவுஸ்திரேலிய அரசு நன்கொடையாக வழங்கிய 3.5 மில்லியன் டொலர் நிதி பங்களிப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். தற்போது காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருதற்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கல்வித் துறை, இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. கல்விக்கான உதவி வழங்குதல், உயர்கல்வித் துறையை விரிவுபடுத்தல் மற்றும் அவுஸ்திரேலிய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.

இலங்கையின் நீண்டகால மூலோபாய பங்காளியாக நாட்டின் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. அதன்படி, இலங்கையின் கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டுசெல்வதில் நம்பகமான பங்காளியாக தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய மேத்யூ டக்வர்த் (Matthew Duckworth), முதல் உதவிச் செயலாளர் கரேன் ஆன் சாண்டர்காக் (Karen Ann Sandercock), பணிக்குழாம் பிரதானி கேமரூன் ஜெஃப்ரி கிரீன் (Cameron Geoffrey Green) , கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஸ்தானிகர் ரூத் பெயர்ட் (Ruth Baird) மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வ, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, உயர்கல்விப் பிரிவின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) அப்சரா கல்தேரா மற்றும் கல்வி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

By C.G.Prashanthan

Arrest

சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது!

December 15, 2025

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பெய்து

po

மொன்றியல் காவல்துறை கண்காணிப்பை அதிகரிப்பு

December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஹனுக்கா (Hanukkah) பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, மொன்றியல் காவல்துறை யூதச் சமூகக்

kam

அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடை

December 15, 2025

அனர்த்த நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடையாக ஒரு தொகை

ca

கனடாவில் நிரந்தர குடியுரிமை; அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

December 15, 2025

கனடாவில் நிரந்தர வதிவிடத்தை எதிர்பார்போருக்கு அரசாங்கம் முக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட

re

’ஏகே 64’ படத்தில் இணையும் பிரபல நடிகை

December 15, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல

san

மீண்டும் சினிமாவில் ’காதல்’ பட நடிகை

December 15, 2025

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய

na

மண்சரிவால் அழிந்த ஒரு வீட்டு உரிமையாளரிடம் மீட்ட நகைகள், பணத்தை ஒப்படைத்த படையினர்!

December 15, 2025

ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையினர், மண்சரிவால் வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு வீட்டு உரிமையாளரிடம்

hare

இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

December 15, 2025

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற

ae

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக அறிவிப்பு

December 15, 2025

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது. அதிக விலை

vad

வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்

December 15, 2025

இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின்

crim

காலை உணவவாக புட்டு தயாரிக்குமாமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி

December 15, 2025

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன்

r

காலி மாநகர சபையில் சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

December 15, 2025

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்