கறுப்பு ஜூலை வரலாற்றுக் காயங்களை ஆற்ற நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நிகழ்வு!

கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் உண்டான வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சகோதரத்துவ தினத்தை முன்னிட்டுச் சோசலிச இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, ‘இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (29) ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது.

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டனர். பின்னர், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி,

கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் இலாபங்களுக்காகப் பிரித்து வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால இன வன்முறைகளால் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைக் கடந்து, எதிர்காலத்தில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

hum

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

July 29, 2026

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,

Accident

திருக்கோவிலில் விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு!

July 29, 2026

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உட்பட

us

அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈராக்கில் தாக்குதல்

July 29, 2026

மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் மீது

toro poli

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் குழந்தைகளைக் கவர முயன்ற 57 வயது தொராண்டோ நபர் – குற்றச்சாட்டுகள்

July 29, 2026

Snapchat, TikTok மற்றும் Fortnite ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் உள்ள குறைந்தபட்சம் 15

WILD FIRE

வடக்கு ஒன்ராறியோவில் காட்டுத் தீயை மூட்டிய கியூபெக் நபர் மீது குற்றச்சாட்டு

July 29, 2026

வடக்கு ஒன்ராறியோ சமூகமான ஹுரோன் ஷோர்ஸில் (Huron Shores) இந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான காட்டுத் தீ விபத்துகள் குறித்து

HNEVLLPEGBEWHABKFIAESZOSVM

மொன்றியல் விமான நிலையத்தில் வண்ணம் பூசியதால் ஏற்பட்ட துர்நாற்றம்: அமெரிக்காவிற்கான விமானங்கள் ரத்து

July 29, 2026

மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Montréal-Pierre Elliott Trudeau International Airport) செய்யப்பட்ட “உட்புற வண்ணம் பூசும்

8

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

July 29, 2026

கன்னியாகுமரி: கேரளாவுக்குத் தடையை மீறி கனிம வளங்களைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், அந்த

EEZ4KO6XDFDSLL4MIMTCNZKYBM

17 ஆண்டுகளுக்கு முன்பு மகன்களைக் கடத்தி போலந்துக்குத் தப்பிச் சென்ற நியூமார்க்கெட் பெண் விசாரணையை எதிர்கொள்கிறா

July 29, 2026

17 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயது மகன்களை அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தி போலந்துக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நியூமார்க்கெட்

7

சென்னை மெட்ரோ பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய் – பொதுமக்களுடன் ரயிலில் பயணம்!

July 29, 2026

சென்னை: தலைநகர் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்

மேற்குப் பகுதி வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மரணம் குறித்து விசாரணை

July 29, 2026

செவ்வாய்க்கிழமை பிந்தைய காலை வேளையில் (Late Tuesday morning) மேற்குப் பகுதி வணிக வளாகத்திற்கு அருகே ஒரு நபர் உயிரிழந்த

760434513_1586175699895755_3591313167844738859_n

16 வயது மகன் மரணம்: கியூபெக் தந்தைக்கு கொலைக் குற்றம் சாட்டப்பட உள்ளது

July 29, 2026

கியூபெக்கில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) பகுதியில் 16 வயது மகன் உயிரிழந்த சம்பவத்தில், 41 வயதான பிலிப் பெனாய்ட் (Philippe

MZ4WOLAUEBA2VKO4X3RD6ZYYTQ

ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஹாமில்டன் பொலிஸார் தெரிவிப்பு

July 29, 2026

ஸ்டோனி க்ரீக்கில் (Stoney Creek) உள்ள குடியிருப்புப் பகுதியில் இருவர் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஹாமில்டன் (Hamilton)