கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 செப்டம்பர் முதல் சர்வதேச கடல் பரப்பில் அமெரிக்கா நடத்தி வரும் இத்தகைய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க தெற்கு கட்டளைப்பீடம் (SOUTHCOM), வெள்ளிக்கிழமை (13) அதிகாலை இந்த “உயிர்க்கொல்லி தாக்குதலை” (Lethal kinetic strike) நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் “நர்கோ-பயங்கரவாதிகள்” (Narco-terrorists) என அமெரிக்கா கூறியுள்ள போதிலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை வல்லுநர்கள் இத்தகைய தாக்குதல்களை “நீதிக்கு புறம்பான கொலைகள்” (Extrajudicial executions) என்று சாடியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு சட்டப்படியான விசாரணைக்கு உரிமை உண்டு என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை கிழக்கு பசிபிக் கடலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 2025 செப்டம்பரில் நடந்த முதல் தாக்குதலின் போது, சிதைந்த படகின் பாகங்களைப் பிடித்துக்கொண்டு கடலில் உயிர் தப்ப முயன்றவர்கள் மீதும் அமெரிக்கா இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை கிழக்கு பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் 40 படகுகள் மீது அமெரிக்கா சுமார் 38 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் அமெரிக்கா ஒரு “ஆயுதமேந்திய மோதலில்” (Armed conflict) ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க இத்தகைய தாக்குதல்கள் அவசியமானவை என்றும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், சர்வதேச கடல் பகுதியில் இத்தகைய தாக்குதல்களை நடத்த அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது