கனடா தினத்தில் ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு

கனடா தினத்தில் (Canada Day) ஹமில்டன் பகுதி பாதுகாப்பு வலயத்தில் (conservation area) காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

புதன்கிழமை (ஜூலை 01) பிற்பகல் 3 மணியளவில், 5050 ஹாரிசன் வீதியில் (Harrison Rd) அமைந்துள்ள பின்புரூக் பாதுகாப்பு வலயத்தில் (Binbrook Conservation Area) இச்சிறுவன் காணாமல் போயிருந்தான். இச்சிறுவன் ‘நெதனியேல் செலம்பி’ (Nathanael Selambi) எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளான்.

பீல் பிராந்திய பொலிஸின் (Peel Regional Police) நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவைச் சேர்ந்த முக்குளிப்பாளர் குழுவினர் (dive teams), வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் அச்சிறுவனின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

இந்த மரணம் குறித்தான விசாரணைகளை ஹமில்டன் பொலிஸ் திணைக்களம் மற்றும் மரண விசாரணை அதிகாரி அலுவலகம் (Coroner’s Office) இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இம்மரணத்தில் எவ்வித சதித்திட்டமும் (foul play) இருப்பதாகத் தங்களுக்குச் சந்தேகம் இல்லை எனவும், இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதவில்லை எனவும் ஹமில்டன் பொலிஸார் சிடிவி நியூஸ் (CTV News) ஊடகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“நெதனியேலின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் இந்தத் துயரமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் எங்களது எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. தேடுதல் நடவடிக்கை முழுவதும் உதவிய பொதுமக்களுக்கும், சமூகப் பங்காளிகளுக்கும் மற்றும் அவசர உதவிக் குழுவினருக்கும் ஹமில்டன் பொலிஸார் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்,” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமில்டன் மாநகர மேயர் ஆண்ட்ரியா ஹோர்வத் (Andrea Horwath) வெளியிட்டுள்ள அறிக்கையில், “7 வயது சிறுவன் நெதனியேல் செலம்பி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். நெதனியேலின் குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள், சக வகுப்புத் தோழர்கள் மற்றும் இந்த நினைத்துப் பார்க்க முடியாத இழப்பால் தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெதனியேலின் குடும்பத்திற்கும் எமது சமூகத்திற்கும் மிகவும் கடினமான இந்த நேரத்தில், தேடுதல் பணிகளுக்கு ஆதரவளித்த ஹமில்டன் பொலிஸார், அவசர உதவிக் குழுவினர், சமூகப் பங்காளிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்,” என்று தெரிவித்துள்ளார்.

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதிவசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

ravi ka

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில்

chief just

ஒரு மோசமான நீதித்துறைஇயற்கை அனர்த்தத்தை விடவும் மிகக் குறுகிய காலத்தில்  நாட்டை அழித்துவிடும்: பிரதம நீதியரசர் எச்சரிக்கை

July 3, 2026

ஒரு நாடு இயற்கை அனர்த்தத்தினால் மாத்திரமன்றி, ஒரு மோசமான நீதித்துறையினாலும் மிகக் குறுகிய காலத்தில் சீரழிந்து அழிந்து போகக்கூடும் என

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

sajith july

46,000 சிறுவர் துஷ்பிரயோகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர்: எதிர்க்கட்சித் தலைவர் கவலை

July 3, 2026

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Yoshitha-new

யோஷித ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

July 3, 2026

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையிலுள்ள சட்டவிரோதப் பணப்பரிமாற்ற (money laundering) வழக்கில், சுமத்தப்பட்டுள்ள ‘சதித் திட்டம் தீட்டியமை’

accident canada

ஹைவே 427 இல் ஒற்றை வாகன விபத்து: முதியவர் ஒருவர் பலி; வடக்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடல்

July 3, 2026

வியாழக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஹைவே 427 இல் (Highway 427) இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில்

toronto police 124

டொரண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவருக்கு கத்திகுத்து

July 3, 2026

டொரண்டோ நகரின் மேற்குப் பகுதியில் (west end) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

HOTLKTAHQRDFPL4CQBA3DDDEIA

கனடா தினத்தில் ஹமில்டன் பாதுகாப்பு வலயத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்பு

July 3, 2026

கனடா தினத்தில் (Canada Day) ஹமில்டன் பகுதி பாதுகாப்பு வலயத்தில் (conservation area) காணாமல் போன 7 வயது சிறுவன்

co

இறைச்சிக்காக கன்றுத்தாச்சிப் பசுவை விற்ற சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

July 3, 2026

கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும்

Suv

சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு!

July 3, 2026

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை பாதயாத்திரையாக கடந்து வரும் “சுப்பிரமணி” என்ற செல்லப்பிராணி நாய்,

spain

ஸ்பெயில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு

July 3, 2026

ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737