கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது.

இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர்.

மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது.

ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

‘சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுற்றிவளைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், பொலிஸாரால் மாத்திரம் இதனை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியாது. மாவட்டக் குழுக்களின் ஊடாகப் பொது அமைப்புகளுக்கு அனுமதிகளை வழங்குவது மிகவும் காத்திரமான செயன்முறையாக அமையும்,’ என்றார்.

இதன்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர்களால் பல்வேறு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மணல் அகழ்வு, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய மூன்று வகையான அனுமதிப்பத்திரங்களும் ஒரே நபர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்துக்கோ வழங்கப்படுகின்றமையும், அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 குளங்களில் மணலைக் கழுவி எடுத்து, அதனை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டது. இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு டிப்பர் மணலை சுமார் 60,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘தூய இலங்கை’ செயலணியின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உண்மையான மணல் தேவையைக் கணிப்பிடுவது அவசியம் எனவும், அதன் ஊடாகவே விநியோகத்தையும் விலையையும் சீராகப் பேண முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் சிறிய தேவைகளுக்கான மணலை, சிமெந்து விற்பனை போன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் அதனை எடுத்துச் செல்லும்போது பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட மாவட்ட மட்டக் குழுவில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளீர்த்தல். மணல் மற்றும் கிரவல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் கள ஆய்வு செய்து அடையாளப்படுத்துதல்.

விநியோகப் பணிகளைப் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஊடாக மாத்திரம் முன்னெடுத்தல். இந்தப் புதிய பொறிமுறையின் தொடர் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, மாகாண மட்டத்திலான மீளாய்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.

cpp

100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந்தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

March 10, 2026

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று

k

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்

March 10, 2026

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச்

no

அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி:வட கொரியா கடும் எச்சரிக்கை

March 10, 2026

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு

nivara

 நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது 

March 10, 2026

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை

lo

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை

March 10, 2026

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி

i

கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

March 10, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விசேட

Airbus_A330-200_-_SriLankan_Airlines_4R-ALG

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்?

March 10, 2026

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான்

oor

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

March 10, 2026

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை

ha

பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு சர்வதேச தலைமைத்துவ விருது

March 10, 2026

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Blac

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

March 10, 2026

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Int

இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

March 10, 2026

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம்

DIG

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட