ரூபாய் 1,18,70,000 (ஒரு கோடியே பதினெட்டிலட்சத்து எழுபதாயிரம்) பெறுமதியான “ஹஷிஷ்” (Hashish) போதைப்பொருள் தொகையொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 03 ஆம் இலக்கப் பொதி பத்தியின் அருகிலுள்ள பெண்களுக்கான மலசலகூடத்திற்குள் இருந்த 02 குப்பைத் தொட்டிகளுக்குள் கைவிடப்பட்ட நிலையில், திங்கட்கிழமை (03) அன்று அதிகாலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அளவு மற்றும் பொருட்கள்: 1 கிலோகிராம் 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஷ் போதைப்பொருள் தொகையானது 07 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றுடன் சில ஜோடிப் பெண்களின் பாதணிகளும் பெண்களின் ஆடைகளும் மலசலகூடத்திலுள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் போடப்பட்டிருந்தன.
சந்தேகம் மற்றும் நடவடிக்கை: கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் தருவாயில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, இந்தப் போதைப்பொருள் தொகையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசிச் சென்றிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதுடன், இந்தைக் கைப்பற்றும் நடவடிக்கையானது திங்கட்கிழமை (03) அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்: தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இந்த “ஹஷிஷ்” போதைப்பொருள் தொகையானது, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.