கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி!

அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாசவுக்கும், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி. ட்ரின் தி டாமுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அமைச்சில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளி நிலைமையினால் இலங்கையின் கடற்றொழில் துறைக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தூதுவர் வியட்நாம் அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் (Climate Change) தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் கலாநிதி ஜினதாச , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அலங்கார மீன் கைத்தொழிலை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான உயர்தர இனப்பெருக்க மீன்களை (Broodstock) பெற்றுக்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுத்தார். இதற்குச் சாதகமாகப் பதிலளித்த தூதுவர், உலக சந்தையில் அலங்கார மீன் கைத்தொழிலில் பெரும் பங்கை வகிக்கும் வியட்நாமின் நவீன தொழில்நுட்ப அறிவையும் ஆதரவையும் வழங்க இணக்கம் தெரிவித்தார்.

மேலும், இறால் பண்ணைத்துறையின் முன்னேற்றத்திற்காக SPF மொனோடான் (SPF Monodon) இறால் குஞ்சு பொரிக்கும் தொழில்நுட்பத்தை (Hatchery techniques) பகிர்ந்துகொள்ளவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும் வியட்நாம் விருப்பம் தெரிவித்தது.

இந்த தொழில்நுட்பப் பரிமாற்றங்களை முறைப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அரச மட்டத்திலான வேலைத்திட்டங்கள் ஊடாக வியட்நாம் முதலீட்டாளர்களை இலங்கையின் கடற்றொழில் துறையில் இணைத்துக்கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

விசேடமாக, நோர்த் சீ (North Sea) நிறுவனத்திற்குத் தேவையான ‘டொரே’ நூல் மற்றும் வலைகளை (Toray yarn and twines) இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வியட்நாமின் விவசாயம் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் (Ministry of Agriculture and Environment) ஒருங்கிணைந்து இந்த முன்மொழிவுகளை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தூதுவர் மேலும் உறுதியளித்தார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது