QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, கார்களுக்கு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேன்களுக்கு 50 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு 100 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.