நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் காலமானார்.
மறையும் போது அவருக்கு 51 வயதாகும். காலி மஹிந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர், அக்கல்லூரியின் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சிரச ரீவி நிறுவனத்தில் நிறைவேற்று நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அவர், அக்காலப்பகுதியில் மிகவும் பிரபலமான “பரிசரயட்ட வினாடியக்” (சுற்றுச்சூழலுக்கு ஒரு நிமிடம்) நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
அதன் பின்னர் பத்திரிகைத்துறையில் நுழைந்த அவர், கடந்த காலங்களில் ‘லங்காதீப’ பத்திரிகையுடன் இணைந்து பணியாற்றியதுடன், ஒரு ஊடகவியலாளராக மட்டுமன்றி ஒரு சிறந்த புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
மறைந்த ஊடகவியலாளர் சஜீவ விஜேவீரவின் உடல் தற்போது காலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் இன்று (08) மாலை 6 மணிக்கு காலி, ததல்ல மயானத்தில் நடைபெறவுள்ளது.