உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு முயற்சி?

பிரஜாசக்தி எனும் நிகழ்ச்சி நிரலூடாக உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு முயற்சி நடப்பதாக வலி வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

வலி வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்பு நிகழ்வில் நேற்று(21.01.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட நான்கு உப அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு நூலகங்கள் உண்டு. ஏனைய மூன்று நூலகங்கள் அதற்குரிய இடங்களில் சிறப்பாக இயங்கினாலும் மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூல்நிலையமானது வசாவிளான் சந்தியில் இன்றளவும் விடுவிக்கப்படாமல் காணப்படுகின்றது.

குறிப்பாக தற்போது 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அதிக நிலப்பரப்பு மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்டதாகும். அதிலும் வசாவிளான் வீதியூடாகப் பயணிக்க முடிந்தாலும் வசாவிளான் சந்தியிலுள்ள நூல்நிலைய காணிக்குள் செல்லமுடியாத நிலையுள்ளது.

நாம் பல்வேறு நிலைமைகளை காட்டிக்கொண்டாலும் எங்களுடைய மக்கள் துன்பதுயரங்களுடன் கிட்டத்தட்ட 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளனர்.

2025ம் ஆண்டு ”மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்படுகின்றது. எமது பிரதேசத்திலும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலைக்கு அருகாக செல்லும் வீதி விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பாடசாலை இதுவரை விடுவிக்கப்படவில்லை. தற்போது வசாவிளான் மத்திய கல்லூரிக்குரிய இடத்தில் தற்காலிகமாக இயங்கினாலும் குறித்த மாணவர்கள் வாசிப்பு மாத போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

எமது எதிர்பார்ப்பும் இந்த குறித்த பாடசாலை மீண்டும் தமது சொந்த இடத்தில் மீளவும் இயங்க வேண்டும் என்பதேயாகும். தற்போது பிரதேசசபை செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காகவும் தென்னிலங்கையினூடாக பிரஜாசக்தி என்ற நிகழ்ச்சி நிரலைக் கொண்டு வந்துள்ளனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருப்பினும் தமது கட்சி சார் நபர்களை நியமித்து அவர்கள் மூலம் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மக்களாகிய நீங்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை நேரடியாக பிரதேசசபையை அணுகி உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என உறுதியளித்துள்ளார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது