உலகளாவிய ரீதியிலான ஆயுதக்குறைப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் – அமைச்சர் விஜித்த ஹேரத்

தற்போது நிலவும் பூகோள அரசியல் நெருக்கடிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்திருப்பதுடன் பல்தரப்புக்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுதப்பரிகரண (ஆயுதக்குறைப்பு) முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் ஆயுதப்பரிகரண முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (23) ஆரம்பமான ஆயுதப்பரிகரணம் (ஆயுதக்குறைப்பு) தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்றைய தினத்துடன் (25) முடிவடையவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (24) அக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நிகழ்நிலை முறைமையில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு மேலும் கூறியதாவது,

2026 ஆம் ஆண்டுக்கான ஆயுதப்பரிகரணம் தொடர்பான மாநாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருக்கும் மொரோக்கோ நாட்டின் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான ஓமர் ஸ்னிபருக்கு எனது வாழ்த்தைத் தெரிவிக்கும் அதேவேளை, இக்காலப்பகுதியில் உரிய சகல பணிகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அவசியமான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது.

தற்போதைய உலகளாவிய நிலைவரங்களை அவதானிக்கையில், அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டியது மிக அவசியம் என்பது நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது நிலவும் பூகோள அரசியல் நெருக்கடிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்திருப்பதுடன் பல்தரப்புக்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுதப்பரிகரண முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனிதாபிமானத்துடன்கூடிய எதிர்காலத்தை உறுதிப்படுத்தவேண்டும் எனில், இவ்விடயத்தில் எம்மனைவரினதும் கூட்டு முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அத்தோடு இவ்விடயத்தில் கூட்டிணைந்ததும் செயற்திறன்மிக்கதுமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதே எம்மனைவரினதும் உறுதியான இலக்காகக் காணப்படவேண்டும்.

அதேவேளை உலகளாவிய ஆயுதப்பரிகரண முயற்சிகளில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற ரீதியில் இலங்கையின் துடிப்பான பங்களிப்பு குறித்து பெருமிதமடைகிறேன். மறுபுறம் இந்த உலகளாவிய ஆயுதப்பரிகரண இலக்கை அடைந்துகொள்வதற்கு உறுப்புநாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாடு என்பவற்றை வெளிப்படுத்தவேண்டியது மிக அவசியமாகும் என வலியுறுத்தினார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்