உயிரிழந்துள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியக் கடதாசி!

தற்போது உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் நிலவும் சட்ட முறைமைக்கு அமைய, பொலிஸார் அல்லது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் வெறும் வாக்குமூலங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சட்ட மதிப்பாவே உள்ளது.

ஆனால், ஒரு நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் சத்தியக்கடதாசி என்பது மிகவும் சக்திவாய்ந்ததும் பாரதூரமானதுமான சாட்சியமாகும். கபில சந்திரசேன ஏற்கனவே ஒரு சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்துள்ளார்.

அதில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரிகள் விரும்பும் வகையில் வாக்குமூலத்தை வழங்காவிட்டால், அதன் விளைவு மரணமாக அமையும் எனத் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான விசாரணையின் போது தற்கொலை செய்து கொண்ட ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டி, தமக்கும் அத்தகைய நிலை ஏற்படும் என அதிகாரிகள் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பலமான சத்தியக்கடதாசியை விசாரணைக்கு உட்படுத்தாமல், அதிகாரிகளின் அழுத்தத்தினால் பெறப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவை அழைப்பதன் நோக்கம் என்ன?

கடந்த காலங்களில் சேயா என்ற சிறுமியின் மரணத்தின் போது, ‘கொண்டயா’ என்பவரைப் பொலிஸார் பிடித்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறினார்கள். அதுவும் ஒரு வாக்குமூலமாகவே இருந்தது. ஆனால் இறுதியில் உண்மை வேறொன்றாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, விசாரணை அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெறப்படும் வாக்குமூலங்கள் எந்தளவுக்குச் செல்லுபடியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

default (15)

கனடா கிரிக்கெட் வாரியத்தின் நிதியை முடக்கியது ஐசிசி: 6 மாத காலக்கெடு விதிப்பு

May 14, 2026

கனடா கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல், நிதி முறைகேடு மற்றும் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) புகார்கள் குறித்து ‘The

ravikaran11

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

May 14, 2026

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை

rain

இலங்கையில் சீரற்ற வானிலையினால் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

May 14, 2026

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த

IUSF-Basil-malwana-house

மல்வானையில் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘உரிமையாளர் அற்ற’ காணியை ஆக்கிரமித்ததுபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

May 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்

dailythanthi_2026-05-13_fg2tx4ye_0

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப்

rain-rules

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை

768-512-26672389-thumbnail-16x9-shan

“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!

May 14, 2026

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த

687648807_1285529470437523_5068884044641172277_n4

“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக

1fb8d4e582643c30a07cba7b79d80a531778748271620113_original

“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

May 14, 2026

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்

ff4c6bd1bec4c8927e87c50e0deb633b_original

திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

May 14, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,

dmk-stalin

“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

May 14, 2026

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

image1-2026-05-14t131334-184-1778744675

“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

May 14, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது