திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் சனிக்கிழமை (24) அதிகாலை உட்கொகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு வீட்டிலிருந்த உபகரணங்களும் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை நஷ்ட ஈடுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட வீட்டினை பெற்று தர வேண்டும் என வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.