சென்னை:
அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை கழகம், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு எதிராகக் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மந்திரி பதவிக்காகத் தவெக-விடம் மண்டியிட்டுக் கிடப்பதாக அவர்கள் மீது அதிமுக தலைமை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அறிக்கையில், “சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. திமுக-வுடன் கூட்டணி என்று பரப்பப்படும் வதந்திகள் திட்டமிட்ட சதி. தவெக-விடம் மந்திரி பதவிக்காக நீங்கள் மண்டியிட்டுக் கிடப்பதாக வரும் செய்திகளை ஏற்கிறீர்களா? நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், “எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்கிறீர்கள். 1.34 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இரட்டை இலைக்காகவும், எடப்பாடியாருக்காகவும் விழுந்தவை. பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைக் கைகழுவிவிட்டு அதிகாரத்திற்காக அலையும் உங்களைச் சாதாரணத் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக என்பது சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல, இது தொண்டர்களின் இயக்கம்” என அந்த அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிமுக-வின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.
#ADMK_Crisis #EPSvsSPV #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May12 #TamilNaduPolitics #FortStGeorge #EdappadiPalaniswami #CVShanmugam #PoliticalBattle #AiadmkSplit #ThalapathyVijay #NewGovernmentTN #TamilNews #VijayMakkalIyakkam #StalinVsVijay #ElectionResults2026 #PoliticalWar_“`