ஈழத்தமிழர் உரிமைகளை முன்வைத்துச் சிறிலங்காவுக்கு அழுத்தம் – பின்லாந்து நாடாளுமன்றத்தில் எழுத்துமூலக் கேள்வி!

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா போர்ஸ்க்ரென் (Bella Forsgrén), நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து எழுத்துமூலக் கேள்வியொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த பெப்பிரவரி 25 ஆம் நாள் (25.02.2026), பின்லாந்தும் சிறிலங்காவும் எல்சிங்கியில் (Helsinki) அரசியல் கலந்தாலோசனை அமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா போர்ஸ்க்ரென் கடந்த ஏப்ரல் 15 ஆம் நாள் (15.04.2026) நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் (சபாநாயகர்) ஓர் அலுவல்முறையான எழுத்துமூலக் கேள்வியைச் சமர்ப்பித்தார்.

அதில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பின்லாந்தின் மனித உரிமை அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும், தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கொழும்பு அரசின் மீது அழுத்தம் செலுத்தவும் பின்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டிய உறுப்பினர்

1948 முதல் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமையை இலங்கை அரசு மறுத்து வருகிறது என்றும், பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51/1 தீர்மானம் உட்பட, பன்னாட்டுச் சமூகத்துடன் ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல அறிக்கைகள் கடுமையான போர்க்குற்றங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கட்டாய இடப்பெயர்வுகள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளன; இவை அனைத்தும் இனவழிப்பாகவே (இனப்படுகொலை) கருதப்படக்கூடியவை என்றும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு கூட ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைக்கவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கவும் மறுக்கும் அதே நிலைப்பாட்டையே தொடர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கேள்வி

இதனடிப்படையில், பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென் (Elina Valtonen) அவர்களுக்குப் பின்வரும் கேள்வியை பெல்லா போர்ஸ்க்ரென் முன்வைத்தார்:

“பின்லாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான அரசியல் கலந்தாலோசனை அமைப்பைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படப் பின்லாந்து எவ்வாறு செயல்படத் திட்டமிட்டுள்ளது?”

இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அலுவல்முறையாக விடையளிக்க வெளியுறவு அமைச்சருக்கு 21 நாள்கள் கால அவகாசம் உள்ளது.

மனித உரிமைக் கொள்கை மீதான ஐயம்

பொறுப்புக்கூறல் மற்றும் நீதியில் மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு அரசுடன் பின்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது. தமிழ் இனவழிப்பிற்கான பொறுப்பைத் தவிர்க்கும் கொழும்பு அரசுடன் உறவுகளை வலுப்படுத்தும் நிலையில், பன்னாட்டு அரங்கில் தாம் முன்னிறுத்துவதாகக் கூறும் மனித உரிமை மையப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையைப் பின்லாந்து உண்மையில் கடைப்பிடிக்கிறதா என்பது கேள்விக்குறியாகிறது.

பொருளாதார மற்றும் சமூக நலன்கள் அடிப்படை மனித உரிமை விழுமியங்களை மீற அனுமதிக்கக் கூடாது. ஈழத்தமிழர்களின் மனித உரிமைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் வரை, பின்லாந்து அரசு தனது நிலைப்பாட்டைப் பயன்படுத்திக் கொழும்பு அரசின் மீது அதியுச்ச அழுத்தத்தைச் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்

pima

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: 9 பில்லியன் ரூபா கொடுப்பனவை நிறுத்தி வைத்தது அரசாங்கம்

April 18, 2026

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும்

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்