இவ்வாண்டு 676 வீதி விபத்துக்களில் 706 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (6) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. 2024, 2025 ஆம் ஆண்டுகளை விட 2026 ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு மாத்திரம் 2,549 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, இதன்போது 2,721 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அதேபோல் இவ்வருடத்துக்கான தரவுகளுக்கமைய ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 74 இனாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆகவும் அதிகரித்துள்ளது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 230 பேர் பாதசாரிகளாவதுடன், 247 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். இது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். சமீபத்தில் பள்ளேகல பகுதியில் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் மீதுள்ள அன்பினால் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர், எனினும் இறுதியில் பிள்ளைகளையே இழக்க நேரிடுகிறது. ஆகையால் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்க வேண்டாம் எனப் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தந்தையும் தாயும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, இடையில் சிறிய பிள்ளையை எவ்வித பாதுகாப்புக் கவசமும் இன்றி வைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான அன்பு? விபத்து சம்பவிக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமல்லவா?

மேலும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வீதி ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தி வருகின்றன. மதுபோதை, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,291 சாரதிகளும், போதைப்பொருள் பயன்படுத்திய 4,055 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தில் தூரப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கும் உரிய ஓய்வு தேவை.

மேலும், கிராமங்களில் நடத்தப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துவோர், முறையான பொலிஸ் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாகப் போட்டியாளர்களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான போட்டிகளின் தூரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீதியில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவருமே வீதி ஒழுக்கத்தைப் பேணிச் செயற்பட்டால் மாத்திரமே இந்த விபத்துப் பேரழிவைத் தடுக்க முடியும் என்றார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட