இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சம்பவத்தை பொலிசார் 02.12.2025 அன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்த நிலையில் வழக்கு 28.09.2025 தவணையிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் 16-12-2025 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது அடுத்த வழக்கு இன்று(16.01.2026 ) தவணையிடப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர்சார்பாக சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

குறித்த சட்டத்தரணி குறித்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் வரமுடியவில்லை க.இளங்குமரன் என தெரிவித்திருந்தார்.

கிராமசேவையாளர் சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன் பொலிஸ் பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் முன்னிலையாகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என பதில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன்போது எதிர்வரும் 20.01.2026அன்று வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு தெரிவித்தார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது