இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ரவி கருணாநாயக்க கைது!

இலஞ்ச ஊழல் பற்றிய சாட்டப் பாடுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, இன்று காலை 8.15 மணியளவில் ஆணைக்குழுவில் அவர் ஆஜரானார். வாக்குமூலம் பதிவு செய்யும் பொருட்டு அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

தேசிய அதிர்ஷ்டலாப சபைக்கு (National Lotteries Board) அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி ஒப்பந்த அடிப்படையில் 5 பேரை நியமித்து, பின்னர் அவர்களைத் தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை தொடர்பில் ரவி கருணாநாயக்கவை நான்கு முறை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஆஜராகத் தவறினார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள ராஜமல்வத்தை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு ஆணைக்குழு அதிகாரிகள் சென்றபோதிலும், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ar 2

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

September 14, 2026

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

arr

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

September 14, 2026

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்

u

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

September 14, 2026

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய

Gnansa

ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை

September 14, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்