இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை வழங்க பணிப்பாளர் சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அந்த நான்கு நிறுவனங்களினதும் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நான்கு நிறுவனத் தலைவர்களும் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணிக்குத் திரும்பும் பட்சத்தில், எஞ்சியுள்ள 2 கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.