இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் – புதிய நடைமுறை?

வீரர்களின் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் சர்வதேச தொடர்களுக்கான கொடுப்பனவு முறையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்களின் திறனை ஊக்குவிப்பதையும் வெற்றிகளைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, புதிய போனஸ் முறைகள் மற்றும் சம்பளக் குறைப்பு விதிகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, இனிவரும் காலங்களில் தொடர் வெற்றிகளுக்கான போனஸ் தொகையானது, தரவரிசையில் முதல் 4 இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிராக வெற்றிபெறும் தொடர்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் தரவரிசையில் முதல் 9 இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிரான தொடர் வெற்றிகளுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

அதேபோல் டெஸ்ட், ஒருநாள் அல்லது இருபதுக்கு-20 என எந்தவொரு போட்டி வடிவத்திலான தொடரில் தோல்வியடைந்தால், அந்தத் தொடருக்கான போட்டி ஊதியத்திலிருந்து 10% தொகை குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இடம்பெறும் தொடர்களின் போது பெறும் வெற்றிகளுக்கு முழுமையான போனஸ் வழங்கப்படும் அதேவேளை, உள்நாட்டில் பெறும் வெற்றிகளுக்கான போனஸ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இருபதுக்கு-20 தொடர்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறும் வெற்றிகளுக்கு சமமான போனஸ் வழங்கப்படும்.

சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள டெஸ்ட் அணியைத் தோற்கடித்தால், கூட்டு போனஸ் தொகையாக 150,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

2-வது, 3-வது மற்றும் 4-வது இடங்களிலுள்ள அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கு முறையே 100,000, 75,000 மற்றும் 60,000 அமெரிக்க டொலர்கள் என குறைந்து செல்லும் வரிசையில் போனஸ் வழங்கப்படும்.

முதலிடத்திலுள்ள அணியைத் தோற்கடித்தால்:

டெஸ்ட்: வெளிநாட்டில் – 150,000 அ.டொ உள்நாட்டில் – 100,000 அ.டொ

ஒருநாள்:

வெளிநாட்டில் – 150,000 அ.டொ உள்நாட்டில் – 75,000 அ.டொ

இருபதுக்கு-20:

உள்நாடு அல்லது வெளிநாடு என எவ்விடத்திலும் முதலிட அணியை வென்றால் 75,000 அ.டொ.

ஒவ்வொரு போட்டிக்காகவும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்:

டெஸ்ட்:

வெற்றிக்கு – 15,000 அ.டொ சமநிலை (Draw) – 10,000 அ.டொ தோல்வி கைவிடப்பட்ட போட்டிக்கு – 7,500 அ.டொ.

ஒருநாள்: வெற்றிக்கு – 7,500 அ.டொ தோல்விக்கு – 3,500 அ.டொ கைவிடப்பட்ட போட்டிக்கு – 3,000 அ.டொ.

இருபதுக்கு-20:

வெற்றிக்கு – 5,000 அ.டொ தோல்விக்கு – 2,500 அ.டொ கைவிடப்பட்ட போட்டிக்கு – 2,000 அ.டொ.

தலைவர்களுக்கான விசேட கொடுப்பனவு:

தலைமைத்துவப் பொறுப்பைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு போட்டியிலும் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.

எனினும், போட்டி முழுவதும் களத்தில் இருந்தால் மாத்திரமே இது வழங்கப்படும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள்:

ஒரு போட்டிக்கு மேலதிகமாக 1,000 அ.டொ.

இருபதுக்கு-20:

ஒரு போட்டிக்கு மேலதிகமாக 500 அ.டொ.

தனிப்பட்ட திறமைகளுக்கான ஊக்கத்தொகை (ICC தரவரிசைப்படி):

எந்தவொரு போட்டி வடிவிலும் உலகின் முதலிட வீரரானால் – 25,000 அ.டொ (ஒருமுறை மாத்திரம்).

உலகத் தரவரிசையில் 2 முதல் 5 இடங்களுக்குள் வந்தால் – 20,000 அ.டொ (ஒருமுறை மாத்திரம்).

இதுதவிர, வருடாந்த ஒப்பந்தத் தொகை, பயணக் கொடுப்பனவு, நாளாந்தப் படி மற்றும் அனுசரணையாளர் பங்களிப்பு ஊடாக மேலதிக கொடுப்பனவுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, புதிய கொடுப்பனவு முறைமை குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

che

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் – சேகுவேரா; இன்று பிறந்தநாள்!

June 14, 2026

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில்

photo-collage.png (2)

காலி முகத்திடலில் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலக சாதனை முயற்சி

June 14, 2026

கொழும்பில் இன்று(14) வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வொன்று இடம்பெற்றள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி,

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்