இலங்கை கிரிக்கெட் அணிக்கான ரி20 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ ஜெர்சி

இலங்கை கிரிக்கெட் அணிக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ ஜேர்சியை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) உத்தியோகபூர்வ ஆடை பங்காளியான மூஸ் குளோதிங் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பங்காளித்துவத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை இது குறிக்கிறது.

அது மட்டுமல்லாமல், முன்னெப்போதையும் விட இலங்கை கிரிக்கெட் அணியுடன் ரசிகர்ளை நெருங்கச் செய்யும் முகமாக வடிவமைக்கப்பட்ட முதலாவது டிஜிட்டல் அனுபவமான மூஸ் ரசிகர் செயலியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவை அனைத்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் 2023இல் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட மூஸ் குளோதிங் நிறுவனத்தின் பங்காளித்துவத்தின் தொடர்ச்சியான பரிணாமத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் பிரபல்ய சின்னமான பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் கரு நீலம் பிணைத்துள்ள இந்த ஜெர்சியானது ஆற்றல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வீரரின் பெயர் மற்றும் இலக்கம் பொறிக்கப்பட்டுள்ள விதமானது சமகால சர்வதேச கலவையை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் ஆடையின் தொள்களில் காணப்படும் கலைத்துவமான நீல நிறம் தேசிய அடையாளத்திற்கு கௌரவம் செலுத்துவதாக அமைகின்றது.

அதே தினத்தன்று, அதே மேடையில் ஜெர்சி அறிமுகத்துடன் ஒரு புரட்சிகரமான ரசிகர் ஈடுபாட்டு தளத்தை மூஸ் அறிமுகம் செய்துவைத்தது.

இந்தத் தளம் மூஸ் ரசிகர் செயலி என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ரசிகர்கள் ஜெர்சியின் ஒரு பகுதியாக மாறுவதற்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த செயலியின் மூலம், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மொசைக்கில் பதிக்கப்பட்ட ஒரு செல்ஃபியை ஆதரவாளர்கள் பதிவேற்றலாம், இது ஒரு சிறப்பு மூஸ் ரசிகர் ஜெர்சியை உருவாக்குகிறது.

இந்த வைபவத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, ‘விளையாட்டை விட ஒரு தேசமாக நாம் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் எப்போதும் எடுத்துக்காட்டுகிறது. புதிய உலகக் கிண்ண ஜெர்சி, மூஸ் ரசிகர் ஆப் ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு இலங்கையரும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த ஜெர்சி அணியை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அது அணியின் பின்னால் நிற்கும் மக்களின் முகங்களையும் கதைகளையும் சுமந்து செல்கிறது. உண்மையாகக் கூறுவதென்றால், எமது வீரர்கள் களத்தில் இறங்கும்போது, அவர்கள் முழு தேசத்தினதும் பெருமையை தங்கள் தோள்களில் சுமந்து செல்கிறார்கள்’ என மூஸ் குளோதிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரிஸ் ஒமர் தெரிவித்தார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் 2026க்கான உத்தியோகபூர்வ ஜெர்சியை ஒத்த ஜேர்சிகளை கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள Moose Clothing stores களிலும், www.mooseclothingcompany.com என்ற இணையதளத்திலும் கொள்வனவு செய்யலாம். மேலும் ஒன்லைனில் கொள்முதல் செய்வோருக்கு ஜேர்சிகள் இலவசமாக விநியோகிக்கப்படும். Moose Fan App மூலம் பிரத்தியேகமாக முன்கூட்டிய ஆர்டருக்கு Moose Fan jerey கிடைக்கும்.

Moose Fan App ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமாவதுடன் Google Play மற்றும் iOS இல் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும்.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்