இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை?

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த சட்டத்தை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை.

ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, 2048ஆம் ஆண்டு வரையில் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது. 2048 இற்கு பின்னரே நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கும். அது வரையில் அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வீதிகளை நிர்மாணிக்க பணம் இல்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை என்றெல்லாம் குறிப்பிட்டார். பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் வங்குரோத்தடைந்த நாடாகவே இருந்தது. அவ்வாறான நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் மாற்றங்களை ஏற்படுத்தி பயணிக்கின்றோம்.

இதுவரையில் மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளோம். அவற்றை பார்த்தால் எமது கொள்கைத் திட்டம், எமது இலக்கு போன்றவை தெளிவாக இருக்கும். வங்குரோத்தடைந்திருந்த நாட்டை கட்டம் கட்டமாக எவ்வாறு கட்டியெழுப்புவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் சில இணக்கப்பாட்டுக்கு செல்ல நேரிட்டது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம். முதற் தடவையாக இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக 2024 டிசம்பரில் முழு உலகமும் ஏற்றுக்கொண்டது. எமது பொருளாதாரம் தொடர்பில் உலகம் முழுவதும் நம்பிக்கை ஏற்பட்டது. எமக்கு மீண்டும் கடன் வழங்க பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் முன்வந்தன. எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் கைகோர்த்துள்ளது. எங்களுக்கு இன்னும் முன்னால் போக வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ற வரவு செலவுத் திட்டமே இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வரி வறுமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்கானது 3275 பில்லியன் ரூபாவாக இருந்தது. அந்த இலக்கை அடையமாட்டோம் என்றே சர்வதேச நாணய நிதியம் நினைத்தது. ஆனால் அதனை 4252 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். இந்த வருடத்தில் முதல் 9 மாதங்களில் எமது அரச வருமானத்தை 20.1 வீதத்தால் அதிகரித்துள்ளோம். அரச நிதி முகாமைத்துவம், வீண் செலவுகளை கட்டுப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாகவே அதனை செய்ய முடிந்தது.

சுங்கத் திணைக்களம்,இறைவரித் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் என்பன பொருளாதாரத்தில் இதயமாகும். இந்த இதயம் காலங்களில் இயங்கவில்லை. இரத்த ஓட்டம் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் வந்து குறுகிய காலத்தில் அந்த இதயத்தை இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலமே அரச வருமானம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் மூலமே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து சில வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலாத்துறையில் சில வரிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களே நாட்டுக்கு அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். கடந்த வருடத்தில் 8.1 பில்லியன் டொலர் அனுப்பியுள்ளனர். இதுவே அதிகளவில் அனுப்பப்பட்ட தொகையாகும். இந்த வருடத்தில் அந்த இலக்கு 9 பில்லியன் டொலராக வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை நாங்கள் வழங்குகின்றோம். பொருளாரத்தில் பலமடையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். அதுவே எங்களின் இலக்காக உள்ளது. அஸ்வெசும போன்ற விடயங்கள் வழங்கப்படுகின்றது. குறுகிய காலத்தில் நாங்கள் பெற்ற வெற்றிகளை நாட்டு மக்கள் அனுபவிக்கவே வழங்குவோம்.

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முடிவடைந்த இருந்த நிலையில் அது நீடிக்கப்பட்டுள்ளது. 2017இல் இது தொடர்பில் நிபந்தனையொன்று விதிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் இருந்தது. ஆனால் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அந்த சட்டத்தை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்காமல் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டியிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள விடயங்கள் புதிய சட்டத்தில் கிடையாது. நாங்கள் கூறியதை செய்கின்றோம். ஒடுக்குமுறை சட்டத்தின் மூலம் அரசாங்கம் செயற்படக்கூடாது. என்றாவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன்போது நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலேயே சட்டத்தை கொண்டு வருகின்றோம்.

அதேபோன்று பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருளை இல்லாமல் செய்யும் வகையிலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஜீ.எஸ்.பி பிளஸ் நீங்குவதால் இல்லாமல் போகும் பொருளாரத்தை விடவும் போதைப் பொருளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் ஏற்படும். இதனால் நாங்கள் முறையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகின்றது என்றார்.

ja

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்

November 21, 2026

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்

ar

இராணுவ களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ

November 21, 2026

திருகோணமலை, ஓர்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவு முகாமின் களஞ்சியசாலையொன்றில் இன்று (21) அதிகாலை ஏற்பட்ட திடீர்

jail

நிதி மோசடி – தனியார் நிறுவன பணிப்பாளர்கள் விளக்கமறியலில்

November 21, 2026

சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக வாக்குறுதியளித்துப் பணம் திரட்டி, அப்பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட

dru

ஐஸ் போதைப்பொருளுடன் மானிப்பாயில் இரு இளைஞர்கள் கைது

November 21, 2026

மானிப்பாய் பகுதியில் நேற்று (20) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள்

ear

இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

November 21, 2026

இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான பெண்டா தீவில் இன்று (21) பிற்பகல் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்

bim

புனரமைப்பு மற்றும் கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

November 21, 2026

அனர்த்த புனரமைப்பு மற்றும் கிராமிய வீதிகள் திட்ட செயற்பாட்டு அலுவலகத்தின் சேவைகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

WhatsApp Image 2026-11-21 at 14.04.23 (2)

ஈழத் தமிழ் யுவதி அவுஸ்திரேலியாவின் உயரிய இசை விருது பெற்றுச் சாதனை!

November 21, 2026

​அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது விழாவான 40-வது வருடாந்திர ARIA (Australian Recording Industry Association) விருதுகளில், ஈழத்

WhatsApp Image 2026-11-21 at 14.04.23 (1)

தெல்லிப்பழை சந்தியில் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள்

November 21, 2026

வலி. வடக்கு, தெல்லிப்பழை சந்தியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தாயக விடுதலைக்காக உயிர்நீத்த

ravich

Toronto கல்விச் சபை உறுப்பினராகப் பதவியேற்றார் ரவிச்சா ரவீந்திரன்!

November 21, 2026

கடந்த ஒக்டோபர் 26-ஆம் திகதி நடைபெற்ற 2026 Toronto மாநகராட்சித் தேர்தலில் Toronto மாவட்டக் கல்விச் சபையின் (Toronto District

cour

யாழ் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை

November 21, 2026

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக,

satti

சாட்டி மாவீரர் துயிலுமில்ல வழக்கில் தீர்வு

November 21, 2026

டை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை

jos sta

வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வில்லை; 30 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு

November 21, 2026

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30