இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“சட்டம் என்பது ஆசைகளினால் பாதிக்கப்படாத தூய பகுத்தறிவு என வரையறுக்கப்பட்டாலும், இலங்கையில் விசாரணை அதிகாரிகள் தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இதன்போது கபில சந்திரசேன என்பவரால் வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி ஒன்றை நாம் ஆதாரமாக முன்வைக்கின்றோம். அந்தச் சத்தியக்கடதாசியில், விசாரணை அதிகாரி ஒருவர் தன்னை அச்சுறுத்தும் தொனியில் பேசியதாகக் கபில சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
வழங்கப்பட்ட வாக்குமூலம்
‘இது உனது கடைசி வாய்ப்பு; இதற்கு முன்னர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தாததால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். நீயும் அவ்வாறு ஆக விரும்பவில்லை என்றால், மகிந்த மற்றும் நாமலின் பெயர்களைக் கூறு’ என அந்த அதிகாரி மிரட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள சட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன கடும் சாடல் | Sanjeeva Edirimanna Strongly Criticizes

விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும் இத்தகைய வாக்குமூலங்களுக்கு முறையான சட்ட வலிமை இல்லை என்றாலும், ஒருவரது தனிப்பட்ட விருப்பங்களைச் சட்டத்துடன் கலக்கும் இத்தகைய செயற்பாடுகள் பாரதூரமானவை.

அத்துடன், இந்தச் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இதற்கு முன்னர் விசாரணையின் அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் செய்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து வாக்குமூலம் அளிப்பதா அல்லது உயிரை மாய்த்துக் கொள்வதா என்ற இரு தெரிவுகளையே விசாரணை அதிகாரிகள் சாட்சிகளுக்கு வழங்குகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இதனை ஒரு அரசியல் கட்சியின் நோக்கமாக மட்டும் பார்க்காமல், சமூக நீதிக்கான ஒரு போராட்டமாக அனைவரும் கருத வேண்டும். இன்று மற்றவர்களுக்கு நடக்கும் இந்த அநீதி நாளை சாதாரண மக்களுக்கும் ஏற்படலாம் என்பதால், சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலைநாட்ட இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது அவசியம்.” என்றார்.

Onta

பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஒன்டாரியோ மாகாணத்தின் முதல் திருநங்கை!

March 22, 2026

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த ஒரு மொடல், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில்

Canada

ஈரான் புரட்சி; கனடாவில் 1979ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமகால நிகழ்வை நினைவுபடுத்திய செய்திகள்

March 22, 2026

ஈரானில் ஏற்பட்ட கலக்கம், உலக எண்ணெய் சந்தைகளில் பெரிய பாதிப்பு, கனடாவிலும் அதன் அப்பாற்பட்ட பகுதிகளிலும் வானளாவிய பெட்ரோல் விலைகள்—2026

Inkaran

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது?

March 22, 2026

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன்

Nilan

இந்து சமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலப்பரப்பை வெளிநாட்டு சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

March 22, 2026

தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டு சக்திகள் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்துவது குறித்து நிலவும் கரிசனைகளை

sman

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தன் கட்சிக்குள் நடப்பவை புரியவில்லை

March 22, 2026

உலகில் நடப்பவை எல்லாம் புரியும் எதிர்க்கட்சித் தலைவருக்கு, சொந்தக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் புரியவில்லை எனப் பெருந்தோட்ட மற்றும்

Ali

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது – அலி சப்ரி

March 22, 2026

சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது

lan

சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

March 22, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை

auto

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

March 22, 2026

பெற்றோல் விலை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு முச்சக்கர

NAMAL

மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு ராஜபக்ஷக்கள் மீது சேறு பூசிக்கொண்டிருக்கிறது அரசாங்கம் – நாமல் ராஜபக்ஷ

March 22, 2026

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக்

Surya

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

March 22, 2026

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம்

vij

விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

March 22, 2026

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும்

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற