இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்துகிறோம்!

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிய தாதியர் பயிற்சிக்காக 2918 பேரை இணைத்துக் கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (14.03.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2025ஆம் ஆண்டுக்குரிய, 2022ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் மூன்று ஆண்டு காலப் பயிற்சியினைப் பெறவுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ஆரம்பத்தில் 2625 பேரை மாத்திரமே இணைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. எனினும், உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்த எண்ணிக்கையை 2918 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் தாதியர் பாடசாலைகளில் பதிவு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 6ஆம் திகதி இவர்களுக்கான பயிற்சிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். பயிற்சிகளை நிறைவு செய்யும் இவர்கள், 2029 ஏப்ரல் மாதம் இறுதித் தேர்வை எதிர்கொண்டு, அதே ஆண்டு ஜூன் மாதளவில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

தற்போது மத்திய அரசின் கீழ் 29749 பேரும், மாகாண சபைகளின் கீழ் 13804 பேரும் என மொத்தம் 43553 தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது சுகாதார சேவையின் மொத்த ஆளணியில் 30 சதவீதமாகும். சுகாதார சேவை என்பது ஒரு புனிதமான சேவையாகும்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இது எப்போதும் ஒரு அத்தியாவசிய சேவையே ஆகும். இந்தச் சேவையில் ஏற்படும் சிறு தடங்கலும் ஒட்டுமொத்த நாட்டையுமே பாதிக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தாதியர் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

leba

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

March 15, 2026

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்

56699

சாரதிகள் கடும் அவதி

March 15, 2026

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்

acc

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

March 15, 2026

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு

popp

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

March 15, 2026

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து

4555

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

March 15, 2026

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும்

hea

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ,

ha

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்

March 15, 2026

027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

fff

போதைப்பொருளுடன் பயணித்த படகு ஒன்று கண்டுபிடிப்பு

March 15, 2026

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

GMOA

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

March 15, 2026

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

arr

இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

March 15, 2026

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு

pon

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

March 15, 2026

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான

alper

கனடாவிலிருந்து அல்பெர்டா பிரிய வேண்டுமா; சுதந்திர மனு இயக்கத்தின் முடிவு நெருங்குகிறது!

March 15, 2026

கையொப்பங்களை சேகரிக்க இன்னும் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அல்பெர்டா சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் குடிமக்கள் முன்னெடுத்த மனு