இன்று அனைத்து சட்டத்தரணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகல்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று (15) பிற்பகல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சங்கத்தின் பொதுச்சபையினால் ஏகமனதாக 4 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டில் தற்போது நிலவும் கொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்றைய தினம் (16) அனைத்து சட்டத்தரணிகளும் தொழில்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருத்தல்.

இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் மற்றும் பொதுப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தல்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயப்படுத்துவது அல்லது அவை உண்மை எனச் சித்தரிப்பது தொடர்பாக பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் அதிருப்தியை வெளியிடுதல்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு கூடிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதுடன், இடவசதி இன்மை காரணமாகச் சிலர் Zoom தொழிநுட்பம் ஊடாக இணைந்துகொண்டதாக ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இக்கொலைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்