இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல பொலிவுட் பாடகி அனுராதா பாட்வாலின் இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை கோபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் ஆகின இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ , அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் , அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.