இணையத் தடைகளை கண்டிக்கும் ஜனாதிபதியின் புதல்வர்

ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவர்களின் மகன் யூசுப் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளை காட்டும் புகைப்படங்கள், காணொளிகள் பரவுவதை தள்ளிப்போடுவதால் எந்த பிரச்சினையும் தீராது என அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியானின் மகனும் அரசு ஆலோசகருமான யூசுப், டெலிகிராம் பதிவொன்றில், இணையத் தடை தொடர்வதால் மக்கள் மற்றும் அரசாங்கத்துக்கிடையிலான இடைவெளி மேலும் பெருகும் என எச்சரித்துள்ளார்.

இணைய தடையினால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிடாத தரப்பினரும் அதிருப்தி வெளிப்படுத்தும் தரப்பில் இணைந்து கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் குறித்த காணொளிகள் வெளிவருவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், இணையத்தை முடக்குவதால் பிரச்சினை தீராது; அதை தற்காலிகமாக ஒத்திவைப்பதே நடக்கும் எனவும் யூசுப் பெசெஷ்கியான் தெரிவித்தார்.

இணையத் தடையை நீக்குவதால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் அபாயத்தை விட, தடையைத் தொடர்வதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என யூசுப் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.

இதேவேளை, இணையத் தடையின் பின்னணியில் அரசு கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு இறந்தோரின் எண்ணிக்கை 25,000 வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு

semm

எதிர்வரும் 27 ஆம் திகதி; செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

April 21, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்

G2geVPza4AEUez7_

“வென்று வா தலைவா.. எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” – விஜய்க்காக சிபி சத்யராஜ் எழுதிய உருக்கமான கடிதம்!

April 21, 2026

சென்னை, தமிழக அரசியலில் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய பாய்ச்சல் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் மகன்

sain

தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உணவகங்கள்

April 21, 2026

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்போது மனித