தூத்துக்குடி
தவெக அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்குத் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அம்மா உணவக ஆய்வு:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே புத்தாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 8 அம்மா உணவகங்களும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவற்றை மேலும் மேம்படுத்த முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
கவனத்தை ஈர்க்கவும் ரீல்ஸ் போடுவதற்கும் பேசுகிறார்கள்:
தவெக அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாக நயினார் நாகேந்திரன் கூறிய குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, “ஆதாரங்களை அவர் முதலில் வெளியிடட்டும். மக்களின் கவனத்தை ஈர்க்கவும், ரீல்ஸ் போடுவதற்காகவும் மட்டுமே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்; இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களால் முடிந்ததைச் செய்யட்டும். இதற்கான தக்க பதிலடியை (Counter) நாங்களும் வைத்துள்ளோம்,” என அமைச்சர் ஸ்ரீநாத் காட்டமாகப் பதிலளித்தார்.
மழைக்கால முன்னெச்சரிக்கை:
மேலும், வரவிருக்கும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
#MinisterSrinath #NainarNagendran #BJPvsTVK #TVKGovernment #ThoothukudiNews #AmmaUnavagam #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates