ஆசியப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை நிரோஷன் டிக்வெல்ல, அஷேன் பண்டார, சாமிக கருணாரத்ன, பினுர பெர்ணாண்டோ, நுவான் துஷார ஆகியோரும் இக்குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
இதுதவிர துடுப்பாட்டவீரர்களான சினேத் ஜெயவர்தன, சொஹான் டி லிவேரா, சுழற்பந்துவீச்சாளர் வனுஜ சஹான், கருக சங்கீத் ஆகியோர் முதற் தடவையாக குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாமுக்கு சஹான் ஆராச்சிகே தலைமை தாங்கவுள்ளார்.
குழாம்: சஹான் ஆராச்சிகே (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), லசித் குறொஸ்புள்ளே, சினெத் ஜெயவர்தன, நுவனிடு பெர்னாண்டோ, சொஹன் டி லிவெரா, அஷேன் பண்டார, சாமிக கருணாரத்ன, தரிந்து ரத்னாயக்க, வனுஜ சஹான், விஜயகாந்த் வியாஸ்காந்த், துஷான் ஹேமந்த, நுவான் துஷார, பினுரா பெர்னாண்டோ, கருக சங்கீத்.